ஹிந்தியில் மிகப்பிரபலமான நடிகர் அமீர்கான் இவர் 14 ம் திகதி தனது 56 வது பிறந்தநாளை கொண்டாடினார்.அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
வாழ்த்திய அனைவருக்குமே நேற்று டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்த அமீர்கான், தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “எனது பிறந்த நாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு நன்றி. அதில் என் மனம் நிறைந்துவிட்டது. இதுதான் எனது கடைசி சமூக வலைதளப் பதிவு. சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன்.
இதற்கு முன் இருந்தது போலவே தொடர்பில் இருப்போம். அமீர்கான் புரொடக்ஷன்ஸ் என்கிற அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை ஆரம்பித்துள்ளோம் அதன் ஊடாக படங்கள் தொடர்பான விபரங்கள் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.