Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
தனுஷின் ‘கர்ணன்’ படத்திற்கு தடைகோரி வழக்கு

Sooriyan FM Gossip - தனுஷின் ‘கர்ணன்’ படத்திற்கு தடைகோரி வழக்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

201 Views
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து கர்ணன் திரைப்படம் உருவாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற ஏப்ரல் 9 ஆம் திகதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கர்ணன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுநல வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

கர்ணன் படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ எனும் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பண்டாரத்தி புராணம் பாடலை யூடியூப் சேனல் மற்றும் கர்ணன் படத்திலிருந்து நீக்கவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பாடலை வெளியிட்ட யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top