வெயில் காலங்களில் ரோஸ் வோட்டர் டோனரை முகத்தில் ஒரு முறை ஸ்பிரே செய்தால் போதும் புத்துணர்வை அளிக்கும்.
ரோஸ் வோட்டர் டோனரை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது ?
ஒரு பாத்திரம் நிறைய ரோஜா இதழ்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை ஒரு பாத்திரத்தில் 1 /2 லீற்றர் தண்ணீர் ஊற்றி , ரோஜா இதழ்களையும் சேர்த்து நன்குக் கொதிக்க விடுங்கள்.
10 நிமிடங்கள் கொதித்த பின்னர் பார்த்தால் தெரியும் ரோஜாவின் நிறம் வெளிர்ந்து அதன் நிறங்கள் தண்ணீரில் கரைந்திருக்கும்.
அதை அப்படியே சூடு ஆற காற்றோட்டமாக வையுங்கள். சூடு தணிந்ததும் ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி முகத்தில் ஸ்பிரே செய்து பயன்படுத்துங்கள்.
இதனால் முகத்திற்கு ஈரப்பதம், பருக்கள் இன்மை, கருமையின்மை, எண்ணெய் இல்லா சருமம் என பல நன்மைகளைப் பெறலாம்.