Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
'பில்லா 2' நடிகர் காலமானார் - இயக்குனர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவிப்பு.

Sooriyan Gossip - 'பில்லா 2' நடிகர் காலமானார் - இயக்குனர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

96 Views
'தல' அஜித் நடிப்பில் வெளிவந்த "பில்லா 2" திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயம் பெற்ற நடிகர் தீப்பெட்டி கணேஷன் மறைவு திரைத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
"ரேணிகுண்டா" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பின்னர் "பில்லா 2" மற்றும் "தென்மேற்குப் பருவக்காற்று" திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நடிகர் தீப்பெட்டி கணேஷன் வேறு படங்களில் வாய்ப்புக்கு கிடைக்காத காரணத்தால் பொருளாதார நிலையில் நலிவடைந்து வறுமையில் வாடியிருந்தார்.

இந்தியாவில் கொரோனா உலகப் பரவல் தொற்று காரணத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், தனக்கு பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி நடிகர் தீப்பெட்டி கணேஷன் வெளியிட்ட காணொளி ஒன்றைப் பார்த்து கவலையடைந்த பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன் தன்னாலான உதவியை வழங்கியிருந்தார்.

இது இப்படியிருக்க, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தீப்பெட்டி கணேஷன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டரில் தனது பிரத்தியேகப் பக்கத்தினூடாக இரங்கல் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன், தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா” எனப் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top