நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.கடந்த வருடம் திருமணம் முடித்தபின் அவர் நடிக்க மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் இப்போதும் அவர் நடிக்க தான் தயார் என கூறியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகு அதிக மரியாதை கிடைப்பதாகவும் தனது காதல் திருமணத்தில் ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கதை உள்ளதாகவும் தன் வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
என் கதை தேர்விலும் வித்தியாசம் பார்க்கவில்லை,எனக்கு காதல், சரித்திர,நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம்.வில்லியாக நடிப்பதிலும் பிரச்சினை இல்லை ஆனால் கதை பிடித்து இருக்க வேண்டும்”என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.