Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
விஷ்ணு விஷால் - சூரி முரண்பாடு முற்றிப் போகின்றது.

Sooriyan Gossip - விஷ்ணு விஷால் - சூரி முரண்பாடு முற்றிப் போகின்றது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

147 Views
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நகைச்சுவை நடிகர் 'பரோட்டா' சூரி ஆகியோருக்கு இடையிலான பகை, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை பொதுவெளியில் கொண்டுவந்து கொட்டித் தீர்க்கும் அளவுக்கு முற்றிக்கொண்டிருக்கின்றது. 
நிலம் வாங்குவது தொடர்பில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் நடிகர் சூரி ஆகியோருக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்தநிலையில், தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து நடிகர் சூரி முறைப்பாடு தெரிவித்ததுடன், அதனை பொதுவெளிக்கு கொண்டு வந்து நியாயம் கோரியிருந்தார்.

இது இப்படியிருக்க, தந்தையின் செயற்பாட்டை நியாயப்படுத்தி அவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி, தனிப்பட்ட சில விஷயங்களை பகிரங்கப்படுத்துவேன் என்று நடிகர் சூரியை பயமுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் நடிகர் விஷ்ணு விஷால்.

இது பற்றி இணையத்தள செய்தி ஊடகம் ஒன்றின் சார்பில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "இந்த வழக்கின் விசாரணை நடந்து வருவதால் என்னால் இதுபற்றி அதிகம் பேசமுடியாது. ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட புகாரில் எனக்கும், என் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவர் அளித்த புகாரின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் விளக்கம் அளிக்கமுடியும்.

அப்படி செய்தால், சூரியின் இருண்ட பக்கங்களை விளக்க வேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால், எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சில வருடங்களுக்கு முன்னர் என் தந்தையின் காலில் விழுந்து வணங்கி, நீங்கள் தான் என்னுடைய கடவுள் என்று சொன்ன ஒருவர், தற்போது எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். சூரி மூலம் தான் சம்பாதித்து சாப்பிடவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை" என கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top