சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
இந்த தங்க முகக் கவசம் மட்டுமில்லாமல் பல வெண்கலத்தினால் ஆன உலோகத் துண்டுகள், தங்கப் படலங்கள், யானைத் தந்தம், பச்சை நிற மாணிக்கக் கல், பட்டு ஆகியவற்றால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஆகியவையும் சான்ஷிங்துய் தொல்லியல் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பிராந்தியத்தை கி.மு 316 முன்பு ஆட்சி செய்த 'ஷு' அரசாங்கம் குறித்த தகவல்களைக் கண்டறிய இந்த புதிய கண்டுபிடிப்புகள் உதவி செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.