Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
கொரோனாவில் இருந்து குணமடைந்த தாயை தெருவில் விட சொன்ன மகன்

sooriyan fm Gossip - கொரோனாவில் இருந்து குணமடைந்த தாயை தெருவில் விட சொன்ன மகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

336 Views
மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 13 ஆம் திகதி  70 வயது மூதாட்டி ஒருவருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிங்காட் சாலையில் உள்ள மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.


சிகிச்சையில் குணமடைந்த அவரை கொரோனா அச்சத்தின் காரணமாக வீட்டில் ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் காவல்துறையினர் வழங்கிய தொடர் ஆலோசனைக்கு பிறகு தங்கள் தவறை உணர்ந்துகொண்ட அவர்கள் மூதாட்டியை ஏற்றுக்கொண்டனர். இதுகுறித்து அந்த வைத்தியசாலையின் வைத்தியர் கூறியதாவது:-
கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி கடந்த செவ்வாய்க்கிழமை வீடுதிரும்ப அனுமதிக்கப்பட்டார் இதையடுத்து அந்த மூதாட்டியின் மகனை அழைத்து தாயை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி தெரிவித்தோம்.

ஆனால் வேதனை அளிக்கும் வகையில் குடும்பத்தினர் மூதாட்டியை வீட்டிற்கு அழைத்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால் குழப்பம் அடைந்த நாங்கள் அவரது தாயை எங்கு அனுப்புவது என்று கேட்டபோது, வீதியில் விட்டுவிடும்படி அலட்சியமாக பதிலளித்தார். இது எங்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து சிங்காட் காவல்துறையினர் உதவியுடன் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றோம். ஆனால் நாங்கள் சென்ற சமயத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டபோது இரவு 8 மணிக்கு தான் வருவோம் என தெரிவித்தனர்.

அந்த மூதாட்டியை அதுவரை அங்கேயே நிற்கவைப்பது கடினம் என கருதிய காவல்துறையினர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கே அழைத்து வந்தனர். மறுநாள் காவல்துறையினர் மூதாட்டியின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தீவிர ஆலோசனை வழங்கினர். அப்போது தங்கள் தவறை உணர்ந்துகொண்ட குடும்பத்தினர் மூதாட்டியை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இது கொரோனா பீதியோ அல்லது குடும்ப பிரச்சினையோ, மூதாட்டி ஒருவரை சொந்த மகனே வீதியில் விட சொன்னது வேதனை சம்பவமாக அமைந்து விட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top