Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
96,மாஸ்டர் திரைப்பட நடிகைக்கு கொரோனா தொற்று

SooriyanFM Gossip - 96,மாஸ்டர் திரைப்பட நடிகைக்கு கொரோனா தொற்றுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

470 Views
தமிழில் 96,மாஸ்டர் ஆகியப் படங்களில் நடித்துள்ள நடிகை கெளரி கிஷன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி,த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ’96’.பள்ளி வயது காதலை மையப்படுத்திய இந்தப் படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் நடிகை கெளரி கிஷன்.திரைத்துறையில் அறிமுகமான முதல் படமே அவருக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும்,பாராட்டுகளையும் பெற்று தந்தது.

இதையடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்த கெளரி கிஷன்,தமிழில் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது கெளரி கிஷனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,“எல்லோருக்கும் வணக்கம் !எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெரிவிக்க நான் இதை எழுதுகிறேன்.COVID - 19 க்கு நான் நேர்மறையை பரிசோதனை செய்திருக்கிறேன்.கடந்த வாரம் முதல் நான் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்,அங்கு நான் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறேன்.

கவலைப்பட ஒன்றுமில்லை,ஏனெனில் நான் எனது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி வருகிறேன்.அதுவரை,நான் ஓய்வில்,உங்கள் அன்பான வாழ்த்துகளை படிக்கிறேன்.ஏனென்றால் அவை நிச்சயமாக வேலை செய்யும்.எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்! நிறைய அன்புடன்,கெளரி” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கெளரி விரைவில் குணமடைய ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இது தவிர,இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும்,‘கர்ணன்’ படத்தில் கெளரி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top