Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
முன்னணி நட்சத்திரங்களுடன் முட்டிக்கொள்ளும் நடிகை - வலுக்கும் சர்ச்சை

Sooriyan Gossip - முன்னணி நட்சத்திரங்களுடன் முட்டிக்கொள்ளும் நடிகை - வலுக்கும் சர்ச்சைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,252 Views
சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் 'பொலிவூட்' நட்சத்திர நடிகை கங்கனா ரணாவத்தின் அண்மைய சமூக வலைத்தளப் பதிவொன்று ஹிந்தித் திரையுலகில் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் திரையுலக இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "தலைவி" திரைப்படம், தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதையாக அமைந்துள்ளதுடன், படத்தில் ஜெயலலிதாவாக வாழ்ந்து நடித்திருக்கின்றார் கங்கனா ரணாவத்.

இந்தநிலையில், வெளியாகவிருக்கும் "தலைவி" திரைப்படம் குறித்து பதிவிடுகையில் தனது திரைத்துறை வாழ்க்கையில் எதிர்கொண்ட கசப்பான சில விஷயங்களையும் அதில் சம்பந்தப்பட்டவர்களையும் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தியுள்ள நடிகை கங்கனா ரணாவத் கூறுகையில் "என்னைத் திரைத்துறையிலிருந்து வெளியேற்ற எல்லாவற்றையும் செய்தார்கள். கும்பல் சேர்த்தார்கள், என்னைத் துன்புறுத்தினார்கள். அந்த பாலிவுட் ஆளுமைகளான கரண் ஜோஹர் மற்றும் ஆதியா சோப்ரா ஆகியோர் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.

பெரிய ஹீரோக்கள் அனைவரும் ஒளிந்துவிட்டனர். ஆனால் கங்கனா ரனாவத் தனது 100 கோடி பட்ஜெட் படத்துடன் பாலிவுட் வரலாற்றைக் காப்பாற்றுவதற்காக வருகிறார். வெளியிலிருந்து வந்த பெண் பாலிவுட்டின் இரட்சகராக மாறி அதைக் காப்பாற்றினார் என்று பொன்னெழுத்துகளில் பொறியுங்கள். வாழ்க்கை நம்மை பல வழிகளில் ஆச்சரியப்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்” என பொங்கியுள்ளார் சர்ச்சைகளின் நாயகி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top