Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
காதல் பிரிவு மனதில் அதிக வேதனை கொடுத்தது - நடிகை அஞ்சலி

Sooriyan Gossip - காதல் பிரிவு மனதில் அதிக வேதனை கொடுத்தது - நடிகை அஞ்சலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,357 Views
இயக்குனர் வசந்தபாலன் கொண்டுவந்த சிறப்பான படைப்புகளில் ஒன்றான "அங்காடித் தெரு" படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் கால் பதித்த நடிகை அஞ்சலி, தனது காதல் வாழ்க்கை குறித்த கவலையை முதல்முறையாக பொதுவெளியில் பகிர்ந்திருக்கின்றார்.
சிறந்த திரைக்கதை கொண்ட படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை அஞ்சலி சில தனிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி கொஞ்சக் காலம் நடிப்பதிலிருந்து விலகியிருந்தநிலையில், மீண்டும் 'ஸ்லிம்'மான தோற்றத்திற்கு மாறி திரைத்துறைக்குத் திரும்பியுள்ளார்.

இந்தநிலையில், திரைத்துறைச் செய்திகளை வெளியிடும் ஊடகத் தரப்பினரை நடிகை அஞ்சலி அண்மையில் சந்தித்திருந்தார். அதில் தனது தனிப்பட்ட மற்றும் திரையுலக வாழ்க்கை பற்றி கூறுகையில், "நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் தகவல் பரவி உள்ளது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன்.

நடிகை மட்டுமன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம். அவர் வலிமையான பெண். அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன்” என மனம் திறந்திருக்கின்றார் அஞ்சலி.





Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top