பிரபல தனியார் தொலைக்காட்சியின் புதிய குரல்களின் தேடல்களை மையமாகக் கொண்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி,பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது.இந்நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஏகப்பட்ட பாடகர்கள் உருவாகி வருகின்றனர்.
அதில் ஒருவரே ரைட்டில் ஜெயித்தாலும் அதில் போட்டியிடும் பாடகர்கள் பலர் மக்கள் மனதில் இலகுவாக இடம் பிடித்து விடுகின்றனர்.அந்தவகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களின் ஆதரவையும்,பாராட்டையும் பெற்றவர் தான் மாளவிகா சுந்தர்.
இவர் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடைபெற்ற ஒரு பாடல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பங்குபற்றியிருந்தார்.
மேலும் இன்ஸ்டா பக்கங்களில் அக்டீவாக இருக்கும் மாளவிகா அண்மையில் ஒரு வீடியோவினை வெளியிட்டிருந்தார்.
அதற்கு ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் மிகவும் மோசமாக மெசேஜ் செய்துள்ளார்.அதனை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் அவருக்கு எழுதி அனுப்பிவைத்த மெசேஜை வாசிக்கக் கூட முடியவில்லை,அந்த அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது.இப்படியான கணக்குகளை தடை செய்யுங்கள் என்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு விடீயோவினை வெளியிட்டுள்ளார் மாளவிகா சுந்தர்.