Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
நடிப்பிலும் இயக்கத்திலும் ஈடுபாடு காட்டும் 'இசைப்புயல்' - சொல்வது என்ன..???

Sooriyan Gossip - நடிப்பிலும் இயக்கத்திலும் ஈடுபாடு காட்டும் 'இசைப்புயல்' - சொல்வது என்ன..???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

150 Views
இரண்டு ஒஸ்கார் விருதுகளை ஒரே தடவையில் இரு கைகளிலும் ஏந்தி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பதாக கோடம்பாக்கத்திலிருந்து செய்திகள் வெளிக்கிளம்பி ஆரம்பித்திருக்கின்றன.

"99 SONGS" என்ற படத்திற்கான கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், அதன் வெளியீடு மற்றும் ரசிகர்களின் வரவேற்பு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார். அத்துடன், ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து அடுத்த படத்தை இயக்குவதற்கான பணிகளை ஆரம்பிக்கவும் முனைப்புடன் உள்ளார் என்கின்றது தமிழ்த் திரையுலகம்.

இது இப்படியிருக்க, தான் இசையமைத்து வெளிவந்த ஒரு சில படங்களின் பாடல் காட்சிகளில் கொஞ்சமாக வந்து போயிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், நடிப்பிலும் ஈடுப்பட்டு காட்ட ஆரம்பித்திருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் 'இசைப்புயல்' என்ன சொல்லப்போகின்றார் என்ற ஆர்வம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்தநிலையில், புகைய ஆரம்பித்திருக்கும் செய்திகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது விளக்கத்தை தெரிவிக்கையில், ''இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன்.


சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்'' என்று கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஒஸ்கார் நாயகன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top