Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் 'இசைப்புயல்' - நடந்தது என்ன....???

Sooriyan Gossip - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் 'இசைப்புயல்' - நடந்தது என்ன....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

742 Views
'ஒஸ்கார் நாயகன்' இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து உருவாக்கியிருக்கும் "99 SONGS" திரைப்படத்தின் தமிழ்  இசைவெளியீட்டு விழாவில் அவர் நடந்துகொண்ட விதம் விவாதத்திற்கு உட்பட்ட நிலையில், அந்த விடயம் குறித்து 'இசைப்புயல்' விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் கடந்த மாதம் இடம்பெற்ற "99 SONGS" படத்தின் இசைவெளியீட்டு விழாவில், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் இருந்த நிலையில், இந்த விழாவினை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி திடீரென ஹிந்தி மொழியில் உரையாடலை ஆரம்பித்தபோது, "ஹிந்தி......?" என்ற ஆச்சரியத்துடனான கேள்வியுடன் மேடையை விட்டு உடனடியாக கீழே இறங்கிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தநிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தச் செயற்பாடு விவாதப் பொருளாக மாறி மிகப் பரவலாகப் பேசப்பட்டதுடன், ஹிந்தி மொழிக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துவிட்டாரோ என்ற தோற்றப்பாட்டையும் உருவாக்கியிருந்தது. இந்த விஷயம் அவரது துறை சார்ந்த பின்னடைவையும் ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையையும் ரசிகர்கள் உட்பட நலன்விரும்பிகளிடம் ஏற்பட்டிருந்தது.

இது குறித்து ஒரு தனியார் ஊடகமொன்றுடனான பேட்டியில் விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான், "99 SONGS" என்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. மூன்று மொழிகளிலும் இசை வெளியீடு மேற்கொள்ளப்படுகின்றது. ஹிந்தி மொழி இசைவெளியீட்டு நிகழ்வில் பாடலாசிரியர் ஆங்கிலத்தில் உரையாடினார். அப்போது ஹிந்தி மொழியில் பேசுமாறு நான் கூறினேன். அதேபோன்று, இது தமிழ் இசைவெளியீடு என்பதால் தமிழிலேயே பேச வேண்டும் என்று கூறியிருந்தேன்.

இருந்தும், படக்குழுவினருக்கு தமிழ் தெரியாது. அதனால் ஹிந்தியில் பேச வேண்டுமென தொகுப்பாளினி தாமாகவே தீர்மானித்துக் கொண்டார். ஆனாலும், ஹிந்தி மொழி பேசுகின்றவர்களை நிகழ்விற்கு அழைத்து வந்ததால் விழாவில் ஹிந்தி மொழியில் பேசுகின்றார்கள் என்ற தவறானதொரு எண்ணப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது.

ஆனாலும், இந்த சம்பவத்தின் மூலம் எதிர்பாராத விதமாக "99 SONGS" திரைப்படத்திற்கான மிகப்பெரிய விளம்பரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அதை நிகழித் தொகுப்பாளினி தேடித்தந்ததையிட்டு அவருக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தேன். அந்தவேளையில், குறித்த தொகுப்பாளினியால் என்ன பதில் பேசுவதென்று தெரியாது திக்குமுக்காடிப் போய்விட்டார்.

என்னைப் பொறுத்தவரைக்கும் அனைத்து மொழிகளும் உயர்வானவை தான். ஆனால், எமது தாய்மொழி தமிழ் தானே. அதனை யாராலும் மாற்ற முடியாது" என தெரிவித்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் 'இசைப்புயல்.'
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top