Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
பதவி விலகினார் நடிகை தீபிகா படுகோனே - குழப்பத்தில் 'பொலிவூட்'.

Sooriyan Gossip - பதவி விலகினார் நடிகை தீபிகா படுகோனே - குழப்பத்தில் 'பொலிவூட்'.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

408 Views

'பொலிவூட்' எனப்படும் ஹிந்தித் திரையுலகில் நடந்துகொண்டிருக்கும் குழப்பங்கள் பல முரண்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், தான் வகித்த பதவி ஒன்றிலிருந்து பொலிவூட் முன்னணி நட்சத்திர நடிகை தீபிகா படுகோனே திடீரென விலகியுள்ளார்.  


தமிழில் "கோச்சடையான்" என்ற திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடமும் பெரும் அறிமுகம் பெற்ற நடிகையான தீபிகா படுகோனே கடந்த 2009ம் ஆண்டு மும்பை திரைப்பட விழா தலைவராக தேர்வு செய்யப்பட்டதுடன், இதுவரை காலமும் குறித்த பதவியில் நீடித்திருந்தார். இருந்தும், திடீரென அந்தப் பதவியிலிருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரணவீர் சிங்கை காதலித்துக் கரம் பிடித்த நடிகை தீபிகா படுகோனே, தான் குறித்த பதவியிலிருந்து விலகுவது தொடர்பாக தெரிவிக்கையில், "எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக இருந்து சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள சாதனையாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானது. ஆனால் தற்போது எனது இதர பணிகள் காரணமாக திரைப்பட விழா தலைவர் பதவிக்கு அர்ப்பணிப்பை கொடுக்க இயலவில்லை. எனவே இந்த பதவியில் இருந்து விலகுகிறேன்'' என கூறியுள்ளார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top