Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
முற்றிப்போகின்றது இயக்குனர் சங்கர் - தயாரிப்பாளர் மோதல்.

Sooriyan Gossip - முற்றிப்போகின்றது இயக்குனர் சங்கர் - தயாரிப்பாளர் மோதல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

700 Views
தமிழ்த் திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்த சங்கர், கோடம்பாக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விலகிப்போய் ஆரம்பித்துள்ளதாகவும், அவர் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி வசூல் நட்சத்திரங்களால் ஓரங்கட்டப்படுவதாகவும் அரசல் புரசலாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இந்தநிலையில், இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடு முற்றிப்போயுள்ளதோடு பரஸ்பர அறிக்கைப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விஷயமும் கூட இயக்குனர் சங்கரின் புகழுக்கு ஒரு இழுக்கு நிலையை ஏற்படுத்தலாம் என்று கோடம்பாக்கம் கூறுகின்றது.

காரணம், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் "அந்நியன்" திரைப்படம் படமாக்கப்பட்டதுடன், அந்தப் படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். அந்தப் படமும் 'சூப்பர்ஹிட்'
திரைப்படமாக அமைந்து சங்கருக்கு புகழையும், தயாரிப்பாளருக்கு பெரும் வசூலையும் வாரிக்கொடுத்திருந்தது.

இந்தநிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் "அந்நியன்" திரைப்படத்தின் கதையை ஹிந்தியில் மீளுருவாக்கும் முயற்சியில் இயக்குனர் சங்கர் இறங்கியுள்ளார். இதற்காக, 'பொலிவூட்' முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரண்வீர் சிங் தன்னைத் தயார்ப்படுத்திவரும் நிலையில், மீளுருவாகவிருக்கும் இந்தப் படத்தை ஹிந்தித் திரையுலகத் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கவுள்ளார்.

இவ்வாறு மீளுருவாகவிருக்கும் "அந்நியன்" திரைப்படக்கதையை இயக்குனர் சங்கர் ஹிந்தியில் மீண்டும் படமாக்க தனது அனுமதி பெற வேண்டுமெனவும், குறித்த கதைக்கான உரிமை தனதெனவும் கூறி தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சங்கருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், எழுத்தாளரும், கதாசிரியரும், "அந்நியன்" திரைப்படத்தின் வசன கர்த்தாவுமான சுஜாதாவிற்கு கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்து கதைக்கான உரிமையை முழுமையாக தனதாக்கிக் கொண்டதையும், "போய்ஸ்" திரைப்படத்தில் சங்கருக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் அதன் பின்னர் தான் கொடுத்த வாய்ப்பில் மீண்டும் இயக்குனர் சங்கர் பெற்ற முன்னேற்றம் ஆகியவற்றையும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நினைவுபடுத்தியிருந்தார்.

இருந்தும், "அந்நியன்" திரைப்படத்தின் கதைக்கான உரிமை தனது என்று இயக்குனர் சங்கர் அடம்பிடித்துக்கொண்டு அறிக்கைபோரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். இதனால், இதுவரை காலமும் தமிழ்த் திரையுலகில் சேர்த்து வைத்த புகழை இயக்குனர் சங்கர் ஒட்டுமொத்தமாக இழந்து வருகின்றார் என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top