Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
மறைந்த சிந்தனையாளர் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்ட பிரபல நடிகர்!!

Sooriyan FM Gossip - மறைந்த சிந்தனையாளர் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்ட பிரபல நடிகர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக்.   இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 
இவர் மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது, மதுரையில் நடைபெற்ற பரத நாட்டியப் போட்டி ஒன்றில் பங்குபற்றினார். இதற்கான இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது.

இவரது நடனத்தையும், மிமிக்ரியையும் பார்த்த பாலச்சந்தர் 1987 ஆம் ஆண்டு வெளியான தனது மனதில் உறுதி வேண்டும் படத்தில் விவேக்கிற்கு நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தார்.1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார்.

இந்நிலையில் தனது நகைச்சுவை மூலமாக மக்களுக்குத் தேவையான நல்ல கருத்துக்களைக் கொண்டு சேர்த்துள்ள இவர், நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து நடிகர் விவேக்கின் நினைவாக நடிகர் நகுல் மரம் ஒன்றை நட்டுள்ளார். மேலும் அந்த மரத்திற்கு ‘மங்களம்’ எனப் பெயர் வைத்துள்ளதாக நகுல் தெரிவித்துள்ளார்.

மேலும் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்டுள்ள பிரபல நடிகர் நகுல் அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் நகுல், ஷங்கர் இயக்கிய Boys படத்தில் விவேக்குடன் இணைந்து நடித்திருந்தார். அப்படத்தில் விவேக்கின் பெயர் ‘மங்களம்’. அதனை நினைவுகூரும் வகையில், தற்போது மாமரம் ஒன்றை நட்டு, அதற்கு அவ்வாறு பெயர் சூட்டியுள்ளார்.

மேலும் மரம் நடும் வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top