Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 திரைப்படங்கள் - இது உங்களில் யாருக்குத் தெரியும்!!

Sooriyan FM Gossip - விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 திரைப்படங்கள் - இது உங்களில் யாருக்குத் தெரியும்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் நடிப்பில் இறுதியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. அதில் விவேக் ஹரிஷ் கல்யாணுடன் டொக்டர் கண்ணதாசன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது. தற்போது நடிகர் விவேக் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருக்கும் நிலையில் அவரின் நடிப்பில் அடுத்ததாக 3 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.

நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தில் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ளார். வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வந்தார். அந்தப் படத்திற்கான அவரது காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதேவேளையில் பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top