Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
மறைந்த நடிகர் விவேக்கிற்கு என் கெளரவம் - நடிகர் அருண் விஜய்.

Sooriyan Gossip - மறைந்த நடிகர் விவேக்கிற்கு என் கெளரவம் - நடிகர் அருண் விஜய்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

211 Views
தன் மறைவினால் திரை ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்ற ஜனங்களின் கலைஞன் 'சின்னக் கலைவாணர்' விவேக்கின் ஆசையையும், அவர் விட்டுச் சென்ற பணியையும் அவரை நேசிக்கும் அனைவரும் தொடர்வதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

இயற்கை மேல் அதிக பற்றுக்கொண்ட சிந்தனையாளர் நடிகர் விவேக் அவர்களுக்கான இறுதி அஞ்சலியாக, அவரது மரம் நாடும் ஆசையை நிறைவேற்றும் வகையில் பலரும் அதனை முன்னெடுத்துவரும் நிலையில் திரைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகளும் அதனைப் பின்பற்றி விவேக்கிற்கு தமது மரியாதையை செலுத்துகின்றனர்.

இந்தநிலையில், நடிகர் அருண் விஜய்யும் மரம் நடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், எதிர்கால சந்ததிக்கும் மரங்களின் தேவையை உணர்த்தும் வகையில் தன்னுடைய சிறு வயது மகனையும் இணைத்து மரம் நடும் பணியை முன்னெடுத்ததுடன், இதில் நடிகர் விஜயகுமாரும் பங்கெடுத்தமை சிறப்பானதொரு விடயமாக பேசப்படுகின்றது. காரணம், ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் ஒன்றாக இணைந்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் சேவையை முன்னெடுத்தமை தான்.

சமூக வலைத்தளமொன்றின் தனது பிரத்தியேகப் பக்கமொன்றில், தாம் மரம் நடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய் இது பற்றிக் குறிப்பிடுகையில், “பூமியை பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை, அடுத்த தலைமுறைக்கு அழகாக கற்றுக்கொடுத்தீர்கள்.. எங்கள் எல்லோருக்கும் தூண்டுகோலாக இருந்ததற்கு நன்றி சார்” என்று பதிவிட்டு மறைந்த 'ஜனங்களின் கலைஞன்' விவேக்கை கௌரவப்படுத்தியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top