Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
'வாழும் பூமியை வளப்படுத்தக் கரம் கோர்ப்போம்' - இன்று 51வது 'உலக பூமி தினம்'.

Sooriyan Gossip - 'வாழும் பூமியை வளப்படுத்தக் கரம் கோர்ப்போம்' - இன்று 51வது 'உலக பூமி தினம்'.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

151 Views
மனித இனத்தின் செயற்பாடுகளால் உருவாகும் இயற்கையுடனான முரண்பாடுகள் காரணமாக உண்டாகும் பிரச்சனைகளை குறைத்து நாம் வாழும் பூமியை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 22 திகதி உலகலாவிய ரீதியில் "உலக பூமி தினம்" கடைப்பிடிக்கப்படுகின்றது. 

'எங்கள் புவியை மீளமைப்போம்' எனும் இந்த ஆண்டின் கருப்பொருளுடன் உலகளாவிய 'பூமி தினம்' இன்று முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் உட்பட்ட அனைத்திற்குமான மிகப் பெரும் பிரச்சனையாக, தற்போது புவி வெப்பமடைதல், வளி மாசுபாடு, காடழிப்பு, இயற்கை வளங்கள் இல்லாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவை காணப்படுகின்றன. இவை நாம் வாழுகின்ற பூமிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்த விஷயங்களாக உள்ளமையால் உலகளாவிய ரீதியில் விவாதத்திற்கு உட்பட்டுள்ளன.

உலகவாழ் மனித இனத்தில் ஒரு பகுதி இந்தப் பூமியையும், இயற்கையையும், கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் முழுமுயற்சியில் ஈடுபட்டிருக்க, பேராசை கொண்ட ஒரு பகுதியினரோ பசுமையாய்க் கிடைக்கும் இந்தப் பூமியை வளங்கள் ஏதுமற்ற வறண்ட பாலைவனமாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எனும் பெயரில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், பெருகி வரும் இயந்திரப் பயன்பாடுகள், பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற பல காரணிகளால் இந்தப் பூமியின் இயற்கைத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக நாசமடைந்து வருவதென்பது, எதிர்காலத்தில் பூமியில் உயிரினங்களின் வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தல்மிக்க விஷயங்களாக மாறியுள்ளன.

இந்தநிலையில், ஒவ்வொரு ஆண்டும் 192 நாடுகளைச் சேர்ந்த 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் 'பூமி தினம்' தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர். இதன் மூலம், உலகின் அதிக குடிமக்கள் உணர்வுபூர்வமான தமது பங்கேற்பை வெளிப்படுத்தும் நாளாகவும் அமைகின்றது.

1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்ட்ரா பார்பரா நகரை ஒட்டிய கடல்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் தாக்கம் காரணமாக, 1970ம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் தேவையை வலியுறுத்தி உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான பேரணி ஊர்வலமொன்றை கடற்கரைப் பகுதியில் ஏற்பாடு செய்தனர்.

இந்தநிலையில், அந்தப் பேரணியானது உலகின் கவனத்தை ஈர்த்ததோடு, அன்றிலிருந்து இன்று வரைக்கும் குறித்த பேரணி நிகழ்ந்த ஏப்ரல் 22ம் திகதி "உலக பூமி தினம்" என கடைப்பிடிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்தது.

புவி வெப்பமயமாதல் என்பதே பூமியில் ஏற்படும் அனைத்துவித பிரச்சனைகளுக்குமான முதல் காரணியாக உள்ள நிலையில், காடழிப்பைத் தவிர்ப்பதோடு முடிந்தவரை மரங்களை நடுவதன் மூலமே புவி வெப்பமடைவதைத் தவிர்த்து காற்றையும், நீரையும், மண் வளத்தையும் சிறப்பாக வைத்திருக்க முடியும். இதன்மூலம் மனித குலத்தின் எதிர்காலத்துக்கு மாத்திரமன்றி இந்தப் பூமிக்கு உரித்துடைய அனைத்து ஜீவராசிகளுக்குமான வாழ்வுரிமையைக் கொடுக்கும் நிறைவையும் நாம் பெற முடியும். ஆகையால், இந்த ஆண்டிலிருந்தேனும் "வாழும் பூமியை வளப்படுத்தக் கரம் கோர்ப்போம்" எனும் உறுதியுடன் முன்னகர்வோம். எம் எதிர்காலத்திற்கான வளங்களை நாமே பாதுகாத்தும் கொடுப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top