Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
செவ்வாய் கிரகத்தில் ஒக்சிஜனை உற்பத்தி செய்த நாசா

sooriyan fm news - செவ்வாய் கிரகத்தில் ஒக்சிஜனை உற்பத்தி செய்த நாசாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

268 Views
உயிர் காக்கும் ஒக்சிஜனுக்காக நாம் பூமியில் ஓடிக் கொண்டிருக்கையில் செவ்வாய்கிரகத்தில் ஒக்சிஜனை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது நாசா.
செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் கனவுத் திட்டம் எட்டி விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்பதற்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வு நடந்திருக்கிறது.

செவ்வாய்கிரகத்தில் ஒக்சிஜன் இல்லை. 96 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடுதான் இருக்கிறது. இந்த சூழலில் மனிதன் அங்கு சென்றால் ஒக்சிஜனை உருவாக்கி சுவாசிக்க வைக்க இயலுமா என்ற கேள்வி எழும்? இதற்கு ஆம் என பதில் அளித்திருக்கிறது நாசா.

மனிதர்களை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யமுடியுமா? என்ற கேள்விக்கு விடை காண நாசா அனுப்பிய Perseverance ரோவர் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாயில் தரையிறங்கியது.

அன்று முதல் தனது பணியை செவ்வனே செய்து வரும் இந்த 6 சக்கர ரோபோ, செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஒக்சைடை எடுத்து ஒக்சிஜனாக மாற்றி இருக்கிறது.

இதற்காக MOXIE என பெயரிடப்பட்ட கருவியை ரோவருடன் இணைத்து அனுப்பியுள்ளனர். கார் பேட்டரி அளவுள்ள இந்த பெட்டி ரோவரின் முன்பகுதியில் அமைந்துள்ளது.

இது கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரித்து ஒக்சிஜனை உருவாக்கும் திறன் கொண்டது. முதல்கட்ட சோதனையில் 5 கிராம் ஒக்சிஜனை இது உற்பத்தி செய்துள்ளது.

இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்களுக்கு சுவாசிக்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஒக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் MOXIE வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உற்பத்தியாகும் ஒக்சிஜனை விண்வெளி வீரர்கள் பயன்படுத்த முடியும் என்பதோடு ரோவர் பூமிக்கு திரும்பும் போது உந்துசக்தியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் சத்தமில்லாமல் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது நாசா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top