Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
முற்றிப்போகின்றது நடிகை ரைசா - மருத்துவர் பைரைவி முரண்பாடு.

Sooriyan Gossip - முற்றிப்போகின்றது நடிகை ரைசா - மருத்துவர் பைரைவி முரண்பாடு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

595 Views
நடிகையும் 'பிக்பொஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் பெற்றவருமான ரைசா வில்சன் அண்மையில் சமூக வலைத்தளமொன்றின் தனது பிரத்தியேகப் பக்கமொன்றினூடாக வெளியிட்ட புகைப்படம் மற்றும் அதனுடன் கூடிய பதிவினால் வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நடிகை ரைசா அண்மையில் அழகியல்துறைசார் பெண் வைத்தியர் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட சிகிச்சை காரணமாக, அவரது ஒரு கண்ணின் கீழ்ப்பகுதி உட்பட முகத்தில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்தது. இந்த விஷயத்தை ரைசா தாமாகவே பொதுவெளியில் புகைப்படத்துடன் கூடிய பதிவாக வெளியிட்டதுடன், குறித்த பெண் வைத்தியருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் தனக்கு நட்டஈடாக இந்திய நாணய மதிப்பில் ஒருகோடி ரூபா தர வேண்டும் என்றும் தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்தல் கடிதம் அனுப்பியிருந்தார்.

நடிகை ரைசாவின் கடிதத்திற்கு தனது சட்டத்தரணி ஊடாக பதில் கடிதம் அனுப்பியுள்ள பைரவி எனும் குறித்த பெண் வைத்தியர், "எனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார். அத்துடன், எனது நற்பெயரைக் கெடுக்க முயற்சிக்கின்றார். அவர் மூன்று நாட்களில் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நடிகை ரைசா மற்றும் வைத்தியர் பைரவி ஆகிய இருவரிடையே முற்றிப்போகும் முரண்பாடு எங்கே சென்று முடியும் என்ற எதிர்பார்ப்போடு இணைய செய்தித் தளங்கள் தமது இரைக்காகக் காத்துக்கிடக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top