Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
'வலிமை' புதிய அப்டேட்: அஜித் ரசிகர்கள் கவலையில்

sooriyan fm Gossip - 'வலிமை' புதிய அப்டேட்: அஜித் ரசிகர்கள் கவலையில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

239 Views
அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை ஒரு ஆண்டுக்கு மேலாக அஜித் ரசிகர்கள் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும்.முதல்வர்,பிரதமர் உட்பட பலரிடமும் இந்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அவர்கள் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே முதலாம் திகதி அஜித்தின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முதல் அறிக்கையில் வருகின்ற மே 1ஆம் திகதி அஜித் குமார் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில்,வினோத் இயக்கத்தில்,எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

இந்த அறிவிப்பு வெளிவரும் வரை கொரோனா இரண்டாவது அலை வரும் என்றும் அதன் தாக்கம் சுனாமி போல் தாக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து,உற்றார் உறவினர் உயிரிழந்து,நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின்படி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றுமொரு திகதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம் என்று கூறப்பட்டுள்ளது.போனிகபூரின் இந்த அறிக்கை அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கலைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top