Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
ஒரு நாளைக்கு பலமுறை முகம் கழுவுதல் ஆபத்து - காரணம் அறிவோம்.

Sooriyan Gossip - ஒரு நாளைக்கு பலமுறை முகம் கழுவுதல் ஆபத்து - காரணம் அறிவோம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

218 Views
அடிக்கிற வெயிலுக்கும் வெப்பத்துக்கும் எத்தனை முறை குளித்தாலும் போதாது என்ற நிலையில் நாம் இருக்க, அடிக்கடி முகம் கழுவுவதே சருமத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கின்றனர் சருமம் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள்.

சிலருக்கு வறட்சியான சருமமும், சிலருக்கு எண்ணெய்த்தன்மை கொண்டதாகவும் முகச் சருமம் காணப்படும். இதில், சருமம் எண்ணெய்த்தன்மை கொண்டதாக இருந்தால் தினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. அது அவசியமானது. சரும துளைகளை சுத்தம் செய்து புத்துணர்ச்சியை கொடுக்கும். எண்ணெய்தன்மையான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அது புத்துணர்வை கொடுக்கும். மேலும் முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்பசையை நீக்கவும் உதவும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம். அது சோர்வை நீக்கி முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும்.

முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் (f)பேஸ் வோஷ் பயன்படுத்துவது நல்லதல்ல. அதில் இருக்கும் ரசாயன பொருட்கள் சருமத்தின் மென்மையையும், இயற்கையான பளபளப்பையும் நீக்கிவிடும். ஆகவே, எண்ணெய்த்தன்மை கொண்ட சருமம் உள்ளவர்கள் டோனர், வெதுவெதுப்பான சுடுநீர் ஆகியவற்றினால் முகம் கழுவலாம். அத்துடன், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் சவர்க்காரம் பயன்படுத்தி முகம் கழுவலாம்.

அதேவேளை, அதிக நேரம் தொடர்ச்சியாக முகம் கழுவதோ அல்லது அதிக நேரம் முகம் துடைப்பதோ முகச் சருமத்திற்கு கெடுதல் தரும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர் சருமம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top