Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
அவசர தேவையான பிராணவாயு உற்பத்திக்காக மகிழுந்துத் தயாரிப்பை நிறுத்திய பிரபல நிறுவனம்.

Sooriyan Gossip - அவசர தேவையான பிராணவாயு உற்பத்திக்காக மகிழுந்துத் தயாரிப்பை நிறுத்திய பிரபல நிறுவனம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

361 Views
இந்தியாவின் ஹரியானாவில் இயங்கும் தமது மகிழுந்து உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, அளவு கடந்து செல்லும் கொரோனா தொற்றாளர்களிற்கான தற்போதைய அதி முக்கிய தேவையான பிராணவாயு உற்பத்தியை ஆரம்பித்துள்ளது பிரபல மகிழுந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று.

பிரபலமான தமது நாமத்தில் உருவாகும் வாகன உற்பத்தி பணிகளை ஹரியானாவிலுள்ள தயாரிப்பு நிறுவனத்தில் மேற்கொள்வதை நிறுத்தியிலுள்ள மாருதி சுசுகி எனும் மகிழுந்து உற்பத்தி நிறுவனம், அந்தத் தயாரிப்பு பட்டடையை இழுத்து மூடாமல், இந்திய மக்களின் உயிர் காப்புப் பணிக்கான தனது செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கின்றது.

கார் உற்பததி பணிகளின் போது மாருதி சுசுகி நிறுவனமானது குறைந்த அளவு ஒட்சிஜனையும் உற்பத்தி செய்கின்றது. இந்தநிலையில், இந்தியாவின் தற்போதைய அதி பயங்கர கொரோனா தொற்றுச் சூழலில் தமது நிறுவனத்தால் உருவாக்கப்படும் பிராணவாயு, கொரோனா தொற்றுக்குள்ளாகி அவஸ்தைப்படும் உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றுவதற்குப் பயன்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது இப்படியிருக்க, தமது உற்பத்தி ஆலைகளின் வருடாந்த பராமரிப்பு பணிகளுக்காக மே மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 9ம் திகதி வரை குறித்த ஆலைகளின் செயற்பாடுகளை நிறுத்தி வைக்க, மாருதி சுசுகி நிறுவனம் முன்னர் திட்டமிட்டிருந்தது. இருந்தும், தற்போதைய அதி அவசர தேவையான பிராணவாயு எனப்படும் ஒட்சிஜன் உற்பத்திக்கான திடீர் முடிவை எடுத்து, அதற்கான செயற்பாடுகளை தொடர்கின்றது குறித்த நிறுவனம் .

இதேவேளை, ஹரியானாவில் மட்டுமல்லாமல், குஜராத் மாநிலத்திலுள்ள தமது உற்பத்திப் பட்டறையிலும் பிராணவாயு உற்பத்தியை மேற்கொள்ளும் தீர்மானத்தை தாம் எடுத்திருப்பதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top