Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
மன விரக்திக்கு உள்ளான நடிகை இலியானா - நடந்தது என்ன...???

Sooriyan Gossip - மன விரக்திக்கு உள்ளான நடிகை இலியானா - நடந்தது என்ன...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
நடிகை இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் தற்கொலைக்கு முயன்றார் என்றும் வெளியான செய்திகளால் தன் உண்மை நிலையை தெரிவிக்க ஊடகத் தரப்பினரை சந்தித்துள்ளார் இலியானா.

தமிழ்த் திரை ரசிகர்களிடம் "கேடி" திரைப்படத்தின் மூலம் அறிமுகம் பெற்ற நடிகை இலியானா, தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த "நண்பன்" படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் வரவேற்புக் கொடுத்து ஏற்றுக்கொண்டனர். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகியவற்றிலும் திறமை காட்டிய இலியானா, முன்னணி நடிகையாக வலம் வந்தபோது அவுஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனுடனான காதலில் விழுந்தார்.

அதன்பின்னர் இலியானாவிற்கான ரசிகர்களின் வரவேற்பு குறைந்து விட்டாலும், அதைப்பற்றிய கவலை எதுவும் இல்லாமல் இருவரும் ஜோடியாக சுற்றித்திரியும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார் நடிகை இலியனா.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் கிசுகிசுக்கள் எழுந்தநிலையில், இருவருக்கிடையில் என்ன ஆனதோ தெரியவில்லை, இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் என்று கதைகள் கிளம்பின. அத்துடன், காதல் பிரிவினால் மன உளைச்சலுக்கு உள்ளான இலியானா, தற்கொலை செய்துகொள்ள முயன்றார் என்றும் செய்திகள் பரவி திரையுலகில் அதிர்ச்சி ஏற்படுத்தின.

இந்தநிலையிலேயே, நடிகை இலியானா ஊடகத்துறையினரை அண்மையில் சந்தித்து தனது நிலை பற்றிக் குறிப்பிடுகையில், "நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும் தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top