Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
திருமணத்திற்கு முதல் நாள் கொரோனாவால் மணமகன் மரணம்

SooriyanFM Gossip - திருமணத்திற்கு முதல் நாள் கொரோனாவால் மணமகன் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,496 Views
இந்தியாவின்  கர்நாடக மாநிலம், கார்வார் மாவட்டம் நந்தனகட்டா கிராமத்தை சேர்ந்த 32 வயதான ஒருவர், தனது திருமணத்திற்கு முதல் நாள் கொரோனா தொற்றால் பரிதாபமாகப் பலியானமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த நபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடுகள் பலமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென மணமகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைகளை முடித்துக் கொண்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

இதனையே அடுத்து திருமண ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில், திருமணத்திற்கு முதல் நாள் குறித்த நபர் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் அவர் வீட்டிலேயே மரணித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top