Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
நல்லதொரு வாய்ப்பை வழங்கியுள்ளேன் - நமீதா...

Sooriyan FM Gossip - நல்லதொரு வாய்ப்பை வழங்கியுள்ளேன் - நமீதா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

853 Views
இளைஞர்களின் மனதில் தனது கவர்ச்சியான நடிப்பால் தனித்துவமான இடத்தைப் பெற்றுக் கொண்டவர் நடிகை நமீதா. 

பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்ததன் மூலமாக நமீதா, வெகுவாக பிரபலம் அடைந்தார். எனினும் திருணம் செய்து கொண்டதன் பின்னர், நடிகை நமீதா திரைத்துறையில் இருந்து விலகுவதாகவும், தனக்கு பிடித்த கதை இருந்தால் படத்தில் நடிப்பது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையால் திரையுலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கொரோனா காரணமாக பல படப்பிடிப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூடுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட பல படக்குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, நடிகை நமீதா, புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். ‘'நமீதா தியேட்டர்'’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள நமீதா, சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளத்தில் படங்களை திரையிடலாம் என கூறியுள்ளார். நமீதாவின் இந்த புதிய ஓடிடி தளம் அடுத்த மாதம் முதல், பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top