Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
பஞ்சாயத்தில் இறங்கியுள்ள கமல் - தீர்வு காணுமா 'இந்தியன்-2'...???

Sooriyan Gossip - பஞ்சாயத்தில் இறங்கியுள்ள கமல் - தீர்வு காணுமா 'இந்தியன்-2'...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

254 Views
இரு பெரும் பிரமாண்டங்களான இயக்குனர் ஷங்கர் மற்றும் 'உலகநாயகன்' கமல்ஹாசன் மீண்டும் கூட்டணியில் ரசிகர்களின் கண்களிற்கு விருந்தளிக்கவிருந்த "இந்தியன்-2" திரைப்படத்தின் தாமதம் நீதிமன்றப்படிகளெல்லாம் கண்டு மீண்டும் கமலிடம் பஞ்சாயத்திற்கு வந்துள்ளது.

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருந்த "இந்தியன்-2" திரைப்படத்திற்கு யார் கண்பட்டதோ தெரியவில்லை, படப்பிடிப்பில் விபத்து, கொரோனா அச்சுறுத்தல், கமலின் அரசியல் பிரவேசம் மற்றும் தேர்தல் போன்ற காரணங்களால் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கின்றது இந்தப் படம்.


இதன் காரணமாக, "இந்தியன்- 2" ற்காக காத்துக் கிடக்காமல் தனது அடுத்த படத்தின் வேலையில் இறங்கிவிட்டார் இயக்குனர் சங்கர். இந்தவேளையில், தேர்தல் முடிவுகள் கமலின் கட்சிக்கு எதிர்பார்த்த பலனைக் கொடுக்காததால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் முடிவிற்கு கமல்ஹாசன் திரும்பியிருக்க, தற்போதைக்கு படப்பிடிப்பை ஆரம்பிக்கும் நிலையில் இயக்குனர் சங்கர் இல்லை. இதனால், "இந்தியன்-2" படத்தை முடித்துக் கொடுக்கும்வரை வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்றது.

நீதிமன்றம் வழக்கை விசாரித்த நிலையில், இரு தரப்பும் கலந்து பேசி ஒரு தீர்மானத்து வர வேண்டும் என அறிவித்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தை பிரயோசனமாக அமையவில்லை. இதனால், இயக்குனர் சங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கிடையில் சமரசம் ஏற்படுத்தும் பஞ்சாயத்தை கமல் ஏற்றிருப்பதாகவும், இதன் காரணமாக சிறந்த தீர்வு என்று ஏற்படும் என்றும் கோடம்பாக்கம் பேசிக்கொள்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top