பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் மரணமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜோக்கர் துளசி நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மக்கள் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
1976 ஆம் ஆண்டு வெளியான ''உங்களில் ஒருத்தி'' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துளசி. பின்னர் பல குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து, திரையுலகினரால் ஜோக்கர் துளசி என்று செல்லமாக இவர் அழைக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.