Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
25 வினாடிகளில் முடிவு ... அதிவிரைவு கொரோனா பரிசோதனையை அறிமுகம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Sooriyan FM Gossip - 25 வினாடிகளில் முடிவு ... அதிவிரைவு கொரோனா பரிசோதனையை அறிமுகம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், இதற்கான முன்னேற்பாடுகளை செய்கிறது. குறிப்பாக, ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக அதிவிரைவு பரிசோதனை முறையை அறிமுகம் செய்ய உள்ளது. 

அதிவேகமாக கொரோனா வைரஸ் சோதனை செய்யும் உலகின் முதல் விமான நிறுவனம் நாங்கள் தான் என பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. தங்கள் கனவுத் திட்டமான இந்த பரிசோதனை திட்டத்தை ‘கேம் சேஞ்சர்’ என்றும் கூறியுள்ளது. மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான கேனரி குளோபாம் நிறுவனத்துடன் இணைந்து இந்த பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

முதலில் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள், விமானிகள் ஆகியோருக்கு பெலிகன் கொவிட் எண்டிஜன் பரிசோதனை செய்யப்படுகிறது. உமிழ்நீரின் மாதிரியை ஸ்மார்ட்போன் போன்ற புளூடூத் வசதி கொண்ட மின்னணு சாதனத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் ரீடரில் செருகப்படுகிறது. இதன்மூலம் உடனடியாக சோதனை முடிவுகள் கிடைக்கும்.

இந்த சோதனை முடிவுகளை, அவர்களின் நிலையான பரிசோதனை முடிவுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்படும். பின்னர் படிப்படியாக மற்ற ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த பரிசோதனையை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சோதனை முடிவு 25 வினாடிகளுக்குள் ஒரு ஆப் மூலம் கிடைக்கும் என்றும், கொரோனா வைரஸ் உள்ளவர்களில் 98 சதவீதத்தினரையும், கொரோனா பாதிப்பு இல்லாதவர்களில் 100 சதவீதத்தினரையும் சரியாக அடையாளம் காணும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனையை சமீபத்தில் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அமெரிக்காவில் பரிசீலனையில் உள்ளது என்றும் கூறி உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top