Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
இரவு நேரத்தில் தலைமுடியை சரியாக பராமரிப்பது மிக முக்கியம்

Sooriyan FM Gossip - இரவு நேரத்தில் தலைமுடியை சரியாக பராமரிப்பது மிக முக்கியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

177 Views
பெண்கள் நிறைய பேர் இரவில் தூங்கும்போது தலைமுடியை  இறுக்கமாக கட்டிக்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அது மிகவும்  தவறானது. 

அப்படி இறுக்கமாக தலைமுடியை கொண்டை போட்டுக்கொள்வது தலைமுடியை கடுமையாக பாதிக்கும்.

கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது.

அதனால் தலைமுடி கள் பாதிப்புக்குள்ளாகும்.

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தலைமுடியை நன்றாக சீவுவது நல்லது.

அப்படி செய்தால் தலைமுடியில் சிக்கல் விழாமல் இருக்கும்.

இரவில் தூங்கும்போது சிக்கல்கள் விழுந்தாலும் எளிதில் சரிப்படுத்திவிடலாம்.

அதைவிடுத்து சிக்கல் முடியுடன் தூங்க சென்றால் அதன் பாதிப்பு அதிகமாகி விடும்.

அதனால் முடியின் அடர்த்தியும், வலிமையும் குறையும்.

முடி கொட்டுதல் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும்.

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பின்னந்தலையில் வியர் வையோ, ஈரப்பதமோ படிந்திருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியமானது.ஏனெனில் அப்படி ஈரப்பதம் இருந்தால் அது தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

பொடுகு தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.இரவில் தலை குளித்தால் முடியை நன்றாக உலரவைத்துவிட்டுத்தான் தூங்க வேண்டும்.

இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடுவது நல்லது. அதன் மூலம் முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும்.தினமும் அதில் தலையை வைத்து படுக்கும்போது அதில் அழுக்குகள் சேர்ந்துவிடும்.

தலையில் இருக்கும் எண்ணெய்யும் தலையணை உறையில் படிந்து அழுக்குடனும் சேர்ந்துவிடும்.அதில் தொடர்ந்து தலைவைத்து படுப்பது முடிக்கு பாதிப்பாகிவிடும
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top