Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன - ஐரோப்பிய ஒன்றியம்.

Sooriyan Gossip - பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன - ஐரோப்பிய ஒன்றியம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

367 Views
பொருளாதார மாறும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகள் தொடக்கம் வறுமைப்பட்ட நாடுகள் வரைக்கும் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனைகளில் ஒன்றுதான் வீதி போக்குவரத்து நெரிசல்.

இந்தப் பிரச்சனைக்கான தீர்வை பல வழிகளிலும் தேடிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நாடுகள் பல்வேறு வித கண்டுபிடிப்புகளை மேற்கொண்டாலும், சாதாரண பயன்பாட்டிற்குக் கொண்டுவரமுடியாத அளவிற்கு மிகப்பெரும் செலவுகள் மிக்கவையாக குறித்த நவீன சாதனங்கள் காணப்படுகின்றன.

இந்தநிலையில், எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளில் எரிபொருள் பாவனையற்றதும், மின்னியல் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையிலானதுமான பறக்கும் டாக்சிகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முழு முயற்சியில் இறங்கியுள்ளதாக ஐரோப்பாவுக்கான வான்வெளிப் பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்திருக்கின்றார்.

பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவிருக்கும் குறித்த பறக்கும் டாக்சிகள் செங்குத்தாக (Vertical Take Off) வான்வெளிக்கு கிளம்பும் திறன்கொண்டதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், வர்த்தக ரீதியில் இவற்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதி பெற்றவையாக உள்ளனவென்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வான்வெளி பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கி தெரிவித்தார்.

இதேவேளை, தானியங்கி முறையில் செயல்படும் ட்ரோன்களின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடும்போது, அவை பொதுப்பயன்பாட்டு நடைமுறைக்கு வர இன்னும் 5 வருடங்களுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்றும், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வான்வெளிப் பாதுகாப்பு நிறுவனம் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து தானியங்கி ட்ரோன் பயன்பாட்டை நடைமுறைச் சாத்தியப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் ஐரோப்பியச் செய்திகள் கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top