Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
தூக்கி எறிந்த அதிஷ்ட இலாபச் சீட்டில் 1 மில்லியன் பரிசுத் தொகை - உரியவரிடம் கையளிப்பு

sooriyan FM Gossip - தூக்கி எறிந்த அதிஷ்ட இலாபச் சீட்டில் 1 மில்லியன் பரிசுத் தொகை - உரியவரிடம் கையளிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

478 Views
அமெரிக்காவில்  கடை ஒன்றில் சுரண்டல் அதிஷ்ட இலாபச் சீட்டை  வாங்கிய பெண் ஒருவர் அதை பாதி மட்டுமே சுரண்டிய நிலையில் கீழே போட்டு சென்றுள்ளார். 
பத்து நாட்களுக்கு பின்னர் கடையை சுத்தம் செய்த போது அந்த சீட்டை கண்டெடுத்தார் அந்த கடையின் உரிமையாளர்.

அந்த கடையை இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் ஒன்று நடத்தி வந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட அந்த சீட்டில் அதை வாங்கியவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் பரிசு அடித்துள்ளது. இந்திய மதிப்பில் 7.2 கோடி ரூபாய்.

அந்த சீட்டை வாங்கிய தங்கள் கடையின் பெண் வாடிக்கையாளரை தேடிப்பிடித்து கொடுத்துள்ளது அந்த குடும்பம். தற்போது அவர்களது நேர்மைக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் மக்கள்.

“உணவு நேர இடைவேளையின் போது கடையில் வந்து சீட்டை வாங்கி சுரண்டினேன். பாதி மட்டுமே சுரண்டிய போது அதிலிருந்து எண் நிச்சயம் வெல்லாது என கணித்து பணிக்கு செல்லும் அவசரத்தில் கீழே போட்டுவிட்டேன்” என்கிறார் 1 மில்லியன் அமெரிக்க டொலர் வென்ற அந்த பெண்.

“அந்த பெண் எங்கள் கடையின் நீண்ட நாள் வாடிக்கையாளர். சம்பவத்தன்று குப்பைதொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சுரண்டப்படாத சீட்டை நான் சுரண்டினேன்.

அதில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அடித்திருந்தது.

அந்த சீட்டை எனது அம்மா தான் விற்பனை செய்தார்.

ஒரு நாள் இரவு மட்டும் நான் கோடீஸ்வரனாக இருந்தேன். அதுவே போதும்” என்கிறார் சீட்டு கடை உரிமையாளரின் மகன் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top