Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
பையா திரைப்படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை இரகசியத்தை வெளியிட்ட இயக்குனர்

Sooriyan FM Gossip - பையா திரைப்படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை இரகசியத்தை வெளியிட்ட இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

288 Views

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் லிங்குசாமியும் ஒருவர். இவர் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.   2001ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானர்.  திருப்பதி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் லிங்குசாமி . ரன், சண்டக்கோழி ,பீமா,  பையா,  வேட்டை, கும்கி, இவன் வேற மாதிரி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். பையா திரைப்படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதையாகும். இந்த படம் 2010 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்து சாதனை நிலைநாட்டியிருந்த திரைப்படம் ஆகும்.


சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பையா படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, முதலில் நாங்கள் படப்பிடிப்பிற்காக சரியான இடங்களைத் தேடினோம். நிறைய தேடுதலுக்கு பின்னர் பெங்களூரில் இருந்து மும்பை பிருதேசங்களைத் தெரிவு செய்தோம். இது முழுக்க முழுக்க டிராவலிங் திரைப்படமாக எடுத்தோம். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கார்த்திக் அவர்களை தேர்ந்தெடுத்தோம்.

நடிகர் கார்த்தி ஒரு நேர்மையான மனிதர். இவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேசப்பட்டது. நாங்கள் இந்த படத்தில் நடிக்க நயன்தாராவிடம் சம்பளத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டோம். அதற்கு பிறகு தயாரிப்பாளருக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஒரு சின்ன பிரச்சனையால் அவர் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டார்.

அதற்கு பிறகு தான் தமன்னா அவர்களை இந்தப் திரைப்படத்தில் நடிக்க வைக்க தீர்மானித்தோம். இந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் அவர் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். பையா திரைப்பட பாடல்கள், நடிகர், நடிகைகள் எல்லோருமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்கள். அது மட்டுமில்லாமல் அந்த வருடம் நடைபெற்ற எல்லா விருதுகளையும் இந்த படத்தின் பாடல்களுக்கும், நடிகர்களுக்கும் தான் விருது கிடைத்தது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top