Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
தீம் இசையின் மூலம் கொரோனா நிவாரண நிதி திரட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான் புதிய முயற்சி !!

Sooriyan FM Gossip - தீம் இசையின் மூலம் கொரோனா நிவாரண நிதி திரட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான் புதிய முயற்சி !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views

சாஹோ படத்துக்காக உருவாக்கப்பட்ட தீம் இசையின் மூலம் கொரோனா நிவாரண நிதி திரட்டுவதற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஜூன் 14 ஆம் திகதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்துள்ளது தமிழக அரசு. ஆனால்,  கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் எந்தவொரு தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைச் சரிசெய்ய, முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். மேலும், சிலர் தங்களுடைய ஓவியங்களை விற்று அதன் மூலம் வரும் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இசையமைப்பாளர் ஜிப்ரான் அவருடைய இசையை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கு வித்தியாசமான முறையைக் கையில் எடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக ஜிப்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 ’சாஹோ’ படத்தின் நாயகன் தீம் இசையை NFT (Non-Fungible Token) முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முறையில் வரும் தொகையில் 50% தமிழக முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கும், அடுத்த 50 % கொரோனா தொற்றின் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக் கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இதுதான் இந்தியாவின் முதல் முறையாக இசைத்துறையில் செய்யப்பட்ட NFT (Non-Fungible Token) முயற்சி ஆகும்.

இந்த இசைத் தொகுப்பைப் பட இயக்குநரைத் தவிர வேறு யாரும் கேட்டதே இல்லை, இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அப்போது காட்சியின் தன்மை கருதி வேறு வகையிலான இசைத் துணுக்கைச் செய்தோம். அதனால் இந்த இசையை எங்குமே வெளியிடவில்லை.

NFT (Non-Fungible Token)  வெளியீட்டு முறையின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள், இந்த இசைத்தொகுப்பை உயரிய விலை கொடுத்து வாங்கலாம். இந்த இசைத்தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும். எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் 2021 ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது" என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top