Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
விஜய் சேதுபதியை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் இவரா ??

Sooriyan FM Gossip - விஜய் சேதுபதியை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் இவரா ??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

151 Views
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் எஸ்.ஜே.சூர்யா . பொதுவாக இவர் இயக்கிய திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்ததன. இவ்வாறு பிரபலமான இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் எந்த ஒரு திரைப்படமும் இயக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

 
 


அந்தவகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக திரை உலகில் வெளிவந்த திரைப்படம் தான் இசை. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு முன்பு எடுத்த திரைப்படத்தை போல மாபெரும் வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் தற்சமயம் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மான்ஸ்டர் எனும் திரைப்படத்தில் கூட இவர் நடித்து இருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படமானது சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கவர்ந்தது . இந்நிலையில் சமீபத்தில் இரவாகாலம், பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராகி விட்டதாம்.

சமீபத்தில் குணசித்திர வேடம் மற்றும் வில்லன் வேடங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் சூர்யா தற்போது சிம்பு நடிப்பில் வெளிவரும் மாநாடு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் திரைப்படத்திலும் நடித்துள்ளாராம் இதன் காரணமாக இந்த திரைப்படங்களுக்கு பாரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எஸ்.ஜே.சூர்யா தரப்பில் இருந்து,  எஸ்.ஜே. சூர்யாவிற்கு இயக்குனராக படம் இயக்குவதில் தற்போது ஆர்வம் இல்லை என தெரியவந்துள்ளது அவருக்கு நடிகராக தான் இருக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம்.

ஆனால் எஸ்.ஜே.சூர்யா விஜய் சேதுபதியுடன் கூட்டணி வைத்து திரைப்படத்தை இயக்கினால் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top