Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
உலக சந்தையில் அறிமுகமாகின்றது MG நிறுவனத்தின் ரேஸிங் மொடல்.

Sooriyan Gossip - உலக சந்தையில் அறிமுகமாகின்றது MG நிறுவனத்தின் ரேஸிங் மொடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

122 Views
உலக வாகனச் சந்தையில் தற்போது பயனர்களால் அதிகம் விரும்பிக் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களில் MG மோட்டார் நிறுவனத்தின் உற்பத்திகள் முன்னிலை பெற ஆரம்பித்துள்ள நிலையில், தனது அடுத்த புதிய மொடலை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது MG.

பாவனையாளர்கள் கொள்வனவு செய்வதற்கு ஏற்றவகையிலான விலையுடன் கூடிய அழகிய தோற்றப்பாட்டுடன் சந்தைக்கு அடுத்தடுத்து அறிமுகமாகும் MG நிறுவனத்தின் வாகன உற்பத்தி மொடல்களின் வரிசையில் புதிதாக இணைக்கின்றது MG 6 X POWER Model.

பாவனையாளர் கொள்வனவிற்காக சர்வதேச சந்தைக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மொடல் MG ரேஸிங் மகிழுந்து, அகலமான தோற்றப்பாட்டையும், Aerodynamic body kit அம்சங்களைக் கொண்டுள்ளது. கொண்டிருக்கிறது. அத்துடன், 305பிஎஸ் பவர் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் 480 என்எம் டார்க் செயல்திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

100KM/H என்ற வேகத்தை வெறும் 6 வினாடிகளில் தொட்டுவிடும் திறனைக்கொண்டதாக உள்ள இந்த மகிழுந்தின் இயந்திர வலுவுடன் 10 Speed EDU 2nd Gen எலெக்ட்ரிக் டிரைவ் கியர்பொக்ஸ் அமையப்பெற்றுள்ளது. அதேவேளை, பிரேக்கிங்கிற்கு ரேசிங் கிரேடு 920E 6 பிஸ்டன் கொண்ட கேலிப்பர்கள் இந்த மகிழுந்தில் பொருத்தப்பட்டிருப்பதால் இது 100KM வேகத்தில் சென்றாலும் திடீரென தடுப்பை பிரயோகிக்கும்போது 33 மீட்டர்களுக்குள் வேகத்தை முற்றாக நிறுத்திவிடும் திறன் கொண்டமைந்துள்ளது.

இவ்வகையான பிரேக்குகளுடன் மிஷலின் பைலட் ஸ்போர்ட் CUP2 ரப்பர்கள் காணப்படுவதனால், MG 6 X POWER Model மகிழுந்தானது அதிவேகத்தில் பயணிக்கும்போது அதனை செலுத்துபவர் சிறப்பாக தனது கட்டுப்பாட்டுக்குள் வாகனத்தை வைத்திருக்க இவ்வகை அமைப்பு உதவும் என்றும் MG உற்பத்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top