இளைஞர்களின் மனதில் இன்று, அதிகமாக ரசிக்கப்பட்ட பாடல்களில் ENJOY ENJAAMI யும் ஒன்று. இந்த பாடல் வெளியானது முதல், உலகளவில் பெரும் ரசிகர்களைக் கட்டி இழுத்துக் கொண்டது.
ரௌடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்த பாடகி தீயின் கவர்ச்சியான குரலால் இந்த பாடல் வெளிவந்தது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, காலா, மாரி 2 , 'சூரரைப்போற்று' உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி தனித்துவமான ரசிகர் கூட்டத்தை ஈர்த்துக் கொண்டார்.
இதனிடையே ' உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, வாத்தி RAID’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய அறிவு, ENJOY பாடல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த இந்த பாடலின் காணொளியை, தற்போது 25 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த சாதனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.