Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
அட்லீக்காக வில்லனாகும் நடிகர் ஜெய்.

Sooriyan Gossip - அட்லீக்காக வில்லனாகும் நடிகர் ஜெய்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

98 Views
தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குனராக ரசிகர்களின் வரவேற்பைப் பெற ஆரம்பித்திருந்த இயக்குனர் அட்லீ திடீரென பொலிவூட் நோக்கி தனது கவனத்தை திருப்பிய நிலையில், ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் புதிய படமொன்று உருவாக்கவுள்ளது. 

ஹிந்தியில் திரைப்படம் இயக்கச் சென்றுவிட்டாலும் தமிழ்த் திரையுலகில் தனது இருப்பை ஒரு தயாரிப்பாளராக நிலைநிறுத்தும் முயற்சியோடு, அடுத்ததொரு புதிய படத்தை தயாரிக்கும் பணிகளில் முனைப்புக் காட்டியுள்ளார் அட்லீ.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்று இரட்டைக் குதிரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் அட்லீ, தனது மனைவி பிரியாவுடன் இணைந்தே பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தத் தயாரிப்பு நிறுவனத்தினூடாக ஏற்கனவே "சங்கிலி புங்கிலி கதவ தொற", "அந்தகாரம்" ஆகிய படங்கள் திரை கண்டிருந்தன.

முன்னர் தயாரித்து வெளியான படங்கள் இரண்டும் தனது கையைக் கடிக்காமல் காசு பார்த்த நிலையில், தமது தயாரிப்பு நிறுவனத்தினூடாக இன்னொரு படத்தை உருவாக்கும் இயக்குனர் அட்லீ, அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தனது உதவி இயக்குனர் ஒருவருக்கு கொடுத்திருப்பதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.

வரவிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஜெய் வில்லன் பாத்திரமேற்று நடிக்கப்போவதாகவும் செய்திகள் கிளம்ப ஆரம்பிருக்கையில், யார் இந்தப் படத்தின் கதாநாயகன் என்ற விஷயம் இன்னும் எம் காதுகளை எட்டவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top