Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
'லைக்' செய்ததால், சிக்கலுக்குள் சிக்கிய நடிகை பார்வதி நாயர்.

Sooriyan Gossip - 'லைக்' செய்ததால், சிக்கலுக்குள் சிக்கிய நடிகை பார்வதி நாயர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

182 Views
கேரள 'பொப்' பாடகர் வேடன் பதிவு செய்த ஒரு சமூகவலைத்தளப் பதிவிற்கு 'லைக்' செய்தமையால், தென்னிந்திய பிரபல நடிகையும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனைகளில் முன்னின்று குரல் கொடுப்பவருமான பார்வதி நாயர் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். 

பாடகர் வேடன் மீது சில பெண்களால் முன்வைக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து அவர் முதலில் மறுப்புத் தெரிவித்திருந்தாலும், பின்னர் அந்தத் தவறுகளை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்புக் கோரி Facebook ல் பதிவிட்டிருந்தார் 'பொப்' பாடகர் வேடன்.

இருந்தும், அவரை தமது தவறை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் அந்தப் பதிவு இல்லை என்று பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறான விமர்சனங்கள் எழுவதற்கு முன்னர் குறித்த பதிவிற்கு 'லைக்' செய்திருந்தார் நடிகை பார்வதி. இந்தநிலையில், நடிகை பார்வதியின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக விமர்சகர்களின் பார்வை திரும்பியது. இதன் காரணமாக பலரதும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் பார்வதி.

இந்தநிலையில், தன்னிலை விளக்கம் ஒன்றை கொடுத்துள்ள நடிகை பார்வதி, “வேடன் மீது குற்றம்சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேடனின் மன்னிப்பு பதிவு பாராட்டும்படியானது இல்லை என்பதை அறிவேன். வேடன் கேட்ட மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்ததும் எனது 'லைக்'கை நீக்கி தவறை திருத்தி விட்டேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன். எனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top