Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
கரும்புள்ளிகள் உள்ளவர்களின் கவனத்திற்கு...

Sooriyan fm Gossip - கரும்புள்ளிகள் உள்ளவர்களின் கவனத்திற்கு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

838 Views
கரும்புள்ளிகளால் மிகுந்த மன வேதனையில் உள்ளவர்களுக்கு, சிறந்த தீர்வுகள் உள்ளன.  நம்மில் பலருக்கும் முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதால்  கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன.

முகப்பருக்கள் வந்தால் சிலர் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி விடுவார்கள். இதனால் பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன. இவ்வாறான கரும்புள்ளிகளை நீக்குவதற்கு பக்கவிளைவு இல்லாத இயற்கையான பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகு பெறும்.

உருளைக்கிழங்கை வட்டவடிவில் வெட்டி முகத்தில் முழுவதுமாக தேய்க்கலாம். உருளைக்கிழங்கை தோல் நீக்கி அதன் சாறு பிழிந்து, பஞ்சில் தொட்டும் முகம் முழுக்க தடவலாம். நேரம் இருந்தால் உருளைக்கிழங்கு தோல் சீவி மிக்ஸியில் அடித்து விட்டமின் ஈ உடன் கலந்து முகத்தில் தடவி மந்தமான நீரில் கழுவி எடுக்கலாம்.

கற்றாழை சரும பிரச்சனைகளை தீர்க்கும் அரு மருந்து. கற்றாழையை நீரில் அலசி உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதிகளை தனியாக எடுத்து முகத்தில் தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இது சருமத்தில் இருக்கும் காயங்களை ஆற்றும். தொடர்ந்து 15 நாட்கள் வரை செய்து வந்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்.

ஓட்ஸ் பயன்படுத்தும் போது அது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், வடுக்களை போக்கச் செய்கிறது. கரும்புள்ளிகளை கொண்டிருந்தால் ஓட்ஸ் பயன்படுத்தும் போது ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் உடன், தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் கரும்புள்ளிகள் படிப்படியாக குறைய கூடும்.

சந்தனப்பொடியை வாங்கி முகத்தில் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் முகம் சந்தன நிறத்தில் கறையில்லாமல் அழுக்கில்லாமல் இருக்கும். வறண்ட சருமம் கொண்டிருப்பவர்கள் சந்தனத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். சந்தனத்துடன் விட்டமின் ஈ எண்ணெய் கலந்தும் பயன்படுத்தலாம். இதனால் கரும்புள்ளிகள் வேகமாக மறையக்கூடும். கரும்புள்ளிகள் மறையும் வரை இதைச் செய்து வரலாம்.

சிறிது மஞ்சளை எடுத்து அதை நீர் விட்டு குழைத்து அப்படியே முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும்.

ஜாதிக்காயை வாங்கி பொடி செய்து இரண்டு சிட்டிகை எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி நன்றாக உலர்ந்ததும் முகத்தை கழுவி எடுங்கள். ஜாதிக்காய்க்கு மாற்றாக ஜாதிக்காய் எண்ணெயும் வாங்கி பயன்படுத்தலாம். இரண்டு துளி ஜாதிக்காய் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top