Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
Apple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்!

sooriyan fm Gossip - Apple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

230 Views
2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் Apple நிறுவனம் 3 புதிய வகை  தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Apple நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்கான Worldwide Developers மாநாட்டை கொரோனாத் தொற்றுக் காரணமாக, ஜூன் மாதம் 07ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் Online இல் நடத்தியது.

இந்த மாநாட்டில் புதிய பொருட்கள் எதுவும் அறுமுகப்படுத்தப்படவில்லை. எனினும் iOS 15, iPadOS 15, WatchOS 8, tvOS 15, உட்பட்ட சில Software Updateகள் மாத்திரமே அறிவிக்கப்பட்டன.

இந்தநிலையில், 2021ஆம் ஆண்டிற்குள் 2 புதிய MacBook Modelகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், புதிய Processor-உடன் ஒரு புதிய Mac mini-யும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களின் படி, அவை 14 இன்ச் மற்றும் 16 இன்ச் MacBook Pro வகை மடிக்கணினிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Mac mini புதிதாக M1X என்ற Processor-உடன் வெளிவரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் Apple நிறுவனத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top