Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
மூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.

Sooriyan Gossip - மூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

237 Views
தான் 'லேடி சூப்பர்ஸ்டார்' என்பதை அடிக்கடி நிரூபிப்பது போன்று அதிரடி காட்டும் நடிகை நயன்தாரா, சத்தமே இல்லாமல் 3 புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது முன்னணியில் இருக்கும் மற்ற நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகிக்கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, தான் ஒப்பந்தமாகும் படங்களில் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து தான் நடிக்கவிருக்கின்றாராம்.

இதேவேளை, திருமணம் குறித்து பல கிசுகிசுக்களும் செய்திகளும் அடிக்கடி எழுந்துகொண்டிருந்தாலும் அது பற்றிய எந்தவித எண்ணங்களும் தற்போதைக்கு நயன்தாராவிடம் இருப்பது போன்று தோன்றவில்லை என்று கோடம்பாக்கம் பேசிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. காரணம், அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தமாகிக்கொண்டிருக்கிறார்.

தற்போது 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் ஜோடியாக "அண்ணாத்த" படத்தில் நடித்த நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக "காத்துவாக்குல ரெண்டு காதல்" மற்றும் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதையம்சம் கொண்டதான "நெற்றிக்கண்" படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றார்.

இந்தநிலையில், புதிதாக நயன் ஒப்பந்தமாகியிருக்கும்
3 திரைப்படங்களில் ஒரு திரைப்படமானது மலையாளத்தில் திரை கண்ட "லூசிபர்" படத்தின் தெலுங்கு மீளுருவாக்கம் என்று கூறப்படுகின்றது. அத்துடன், ஏனைய இரண்டு படங்களும் நாயகியை முக்கியத்துவப்படுத்தும் கதையம்சம் கொண்ட தமிழ்ப் படங்கள் என்றும், இவை குறித்த அறிவிப்புக்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியாகும் என்றும் கோடம்பாக்கம் காற்று சொல்லிச் செல்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top