Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
நீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை

sooriyan gossip - நீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

186 Views
நாம் சாப்பிடும் உணவு முறைகள் நம் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருந்தாலும் அதை சமைக்கும் முறையில் செய்யும் சில தவறுகளும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கின்றன. 
தவறான எண்ணெய் பயன்படுத்துதல்
ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு வெப்பநிலை இருக்கிறது. அதன் வெப்பநிலையை தாண்டி சூடாக்கும்போது அது உணவின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஓலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
வதக்க, சமைக்க தேங்காய் எண்ணெய், திராட்சை விதை எண்ணெய் , சூரியகாந்தி எண்ணெய் சிறந்தது.

அளவில் கவனமின்மை
அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு அளவு இருக்க முடியாது. அதேபோல் ஆண் பெண் இருவருக்குமான உணவு சாப்பிடும் அளவு வேறுபடும். ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உயரத்திற்கு ஏற்ப உணவின் அளவும், ஊட்டச்சத்தும் இருக்க வேண்டும். அப்படி உங்கள் உடலமைப்பிற்கு மீறிய உணவை சாப்பிடும்போது அவை கொழுப்பாக சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கலாம்.

வேக வைப்பது சிறந்தது
உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அவர்களுடைய உணவுகளை அதிகபட்சம் வேக வைத்துதான் சாப்பிட வேண்டும்.
அது சிக்கன், மீன் இப்படி எதுவாயினும் வேக வைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய் ஊற்றி காரசாரமாக ரோஸ்ட் அல்லது கிரில் செய்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

மசாலாக்களை தவிர்த்தல்
உணவுக்கு சுவை கூட்டும் மசாலாக்களை பயன்படுத்தும்போது கவனம் அவசியம். குறிப்பாக சக்கரை, உப்பு பயன்பாடு உணவுக்கு சுவை கொடுத்தாலும் அவை உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே அதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துங்கள். மற்ற மசாலா வகைகளை பயன்படுத்தும்போது அதன் அளவுகள், கலோரிகளில் கவனம் அவசியம்.

அதிக எண்ணெய்
எண்ணெய் உணவுகள் கொழுப்பு நிறைந்தவை.
அவை உடலில் தேவையற்ற கொழுப்பை அதிகரிக்கும். எனவே உணவில் நீங்கள் சேர்க்கும் எண்ணெய் என்பது துளிகளாக இருக்க வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top