Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
நயனுக்கான கேள்விகளுக்கு பதில் தந்திருக்கின்றார் பிரபல இயக்குனர்

Sooriyan FM Gossip - நயனுக்கான கேள்விகளுக்கு பதில் தந்திருக்கின்றார் பிரபல இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

458 Views
தென்னிந்திய தமிழ் சினிமாவில்  பிரபலமான நடிகையாக நிகழ்ந்துகொண்டிருக்கும் நடிகை நயன்தாரா.

சமீபகாலமாக நயனின் காதல் மற்றும் அவரின் திருமணம் தொடர்பாக பல கேள்விகளும், வதந்திகளும், அத்தனை கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போன்ற செய்திகளும் வெளியாகின.

இருந்தும் நயன்தாரா ,இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக வெளிவந்த செய்திகளை தொடர்ந்து ,அவர்கள் இருவரும் தொடர்பாக பல செய்திகள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில் அவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியான பின்னர்,நேற்று விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.இதன் போது ரசிகர்கள் அனைவரும் நயன்தாரா குரித்து கேள்வி எழுப்பினர்.


கேள்வி: நயன்தாராவுக்காக உங்களின் முதல் கிப்ட் என்ன?
பதில்: தங்கமே... பாடல்

கேள்வி: நயன்தாராவுக்கு எந்த லுக் பொருத்தமாக இருக்கும், வெஸ்டர்ன், டிரெடிஷனல் உங்கள் விருப்பம் எது?
பதில்: அவர் புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும்.

கேள்வி: நயன்தாரா அழகின் ரகசியம் என்ன?
பதில்: பிரார்த்தனைகள்

கேள்வி: நயன்தாராவுடன் உங்களது விருப்பமான இடம்?
பதில்: அவருடன் எங்கு சென்றாலும் அது உடனடியாக விருப்பமான இடமாகிவிடும்.

கேள்வி: நயன்தாரா நடிச்சதுல உங்க அபிமான திரைப்படம் எது?
பதில்: ராஜா ராணி

கேள்வி: நயன்தாரா, உங்களைப் பற்றிய சில ரகசியம்
பதில்: டின்னர் முடிந்ததும் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவுவார்.

கேள்வி: நயன்தாரா கூட நடிக்க ஏன் முயற்சி பண்ணல?
பதில்: முயற்சி பண்றேன். ஆனா, அவங்க கண்டுபிடிச்சிடுறாங்க.

கேள்வி: நயன் சமைக்கிறதுல பிடிச்சது?
பதில்: கீ ரைஸ், சிக்கன் கறி

கேள்வி: ஒரு நாள் திடீரென, நீங்கள் நயன்தாராவாக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: ஷுட்டிங் போக வேண்டியதுதான்.

கேள்வி: நயன்தாரா பத்திதான் எல்லாரும் கேக்குறாங்க, என்ன பீல் பண்றீங்க?
பதில்: பெருமையா இருக்கு

இவ்வாறாக அத்தனை கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top