Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
'தளபதி'விஜய்யை சீண்டிய நடிகர் - கொதிப்பில் ரசிகர்கள்.

Sooriyan Gossip - 'தளபதி'விஜய்யை சீண்டிய நடிகர் - கொதிப்பில் ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

851 Views
'தளபதி' விஜய் நடிப்பில் உருவான சில மொக்கைத்  திரைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளத்தின் தனது பிரத்தியேகப் பக்கங்களினூடாகக் கலாய்த்துப் பதிவிட்ட நடிகருக்கும் 'தளபதி' ரசிகர்களுக்கும் இடையில் நீண்ட இடைவெளியின் பின்னர் சிக்கல் ஆரம்பித்துள்ளது.

தமிழ்த் திரைத்துறையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் மிகப்பெரும் தடம் பதிக்கக் காரணமான "மாநகரம்" திரைப்படத்திலும், "மாயவன்", "நெஞ்சில் துணிவிருந்தால்" போன்ற படங்களிலும் நடித்துப் பெயர் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன் தான் இந்தச் சிக்கலில் இறுகிக்கொண்டிருக்கின்றார்.

விஜய் நடிப்பில் வெளிவந்து மொக்கைப் படம் என்று பலராலும் கழுவி ஊற்றப்பட்ட "சுறா" திரைப்படத்தை கேலி செய்து, அந்தப் படம் வெளிவந்த காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார் நடிகர் சந்தீப் கிஷன். பின்னர் அண்மைய காலப்பகுதியில், 'தளபதி' விஜய் பற்றி பெருமையாகவும் பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில், நடிகர் சந்தீப் கிஷனின் இவ்விரு பதிவுகளையும் முன்வைத்து 'தளபதி' ரசிகர்கள் பல்வேறு 'மீம்ஸ்'களை உருவாக்கியும், சமூக வலைத்தளத்தில் கலாய்ப்புப் பதிவுகளையும் மேற்கொண்டு நடிகர் சந்தீப் கிஷனை சீண்ட ஆரம்பித்துள்ளனர்.

எப்போதோ நடந்த விஷயம் நீண்ட காலத்தின் பின்னர் கிளறப்படுமென்று சற்றும் எதிர்பார்க்காத நடிகர் சந்தீப் கிஷன் சற்றுக் குழம்பிப்போனாலும், பின்னர் தன்னிலைத் தெளிவடைந்து இது குறித்து விளக்கமளிக்கையில், “இதை நான் யாருக்கும் நிரூபிக்க தேவை இல்லை. ஆனாலும் எனது வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய தோன்றியது. எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். எனக்கு கஷ்டமான நேரங்களில் பல வகையில் ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. விஜய் படங்களை பார்த்து ரசித்துத்தான் நான் வளர்ந்து இருக்கிறேன். இடையில் சில காலம் மட்டும் ஒரு வழக்கமான ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் கடந்த 10 வருடங்களில் அவரது பயணம் எனக்கு ஊக்கத்தை அளித்து இருப்பதாக பெருமையோடு கூறுவேன். இன்று நான் அவரது மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்” என்று மீண்டும் பதிவொன்றைப் பகிர்ந்திருக்கின்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top