Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
OTT தளங்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றேன் - நடிகை ரகுல் பிரீத் சிங்.

Sooriyan Gossip - OTT தளங்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றேன் - நடிகை ரகுல் பிரீத் சிங்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

871 Views
ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிப் போட்டிருக்கும்  கொரோனா உலகப் பரவல் தொற்றுக் காரணமாக  திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், திரைப்படங்கள் வெளியாவதற்கான கதவை அகலத் திறந்து வைத்துள்ளன OTT இணையத் தளங்கள்.

இந்தநிலையில், திரைப்படங்கள் வெளியாவதற்கான வாய்ப்புகள் திரையரங்குகள் மூடியுள்ளதால் சிக்கலுக்கு உள்ளானமை பற்றி நடிகை ரகுல் பிரீத் சிங் தனது கருத்துக் கூறுகையில், “OTT இணையத் தளங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன் மூலம் நடிகர் - நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. தீவிர கொரோனா தொற்றுப் பரவல் காலமென்பதால், திரையரங்குகளுக்குச் சென்று மக்கள் படம் பார்க்க முடியாது.

இந்தநிலையில், திரைப்பட ரசிகர்கள் OTT இணையத் தளங்களை வரவேற்கத் தொடங்கிவிட்டனர். இதனால், உலகளாவிய ரீதியில் பெருமளவு மக்கள் திரைப்படங்களை ரசிக்க ஆரம்பித்துள்ளனர். சிறந்த திரைக்கதை கொண்ட படங்களை பெரியளவில் பாராட்டுகின்றார்கள். திரையரங்குகளில் படங்களை ரசிக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இருந்தும், தற்போது OTT தளங்களில் படங்களை பார்ப்பதற்கு விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்திருக்கின்றது.

மக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் கொண்ட இணையத் தளங்கள் பெருமளவு இருந்தாலும், திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகளுக்குச் சென்று பெரிய திரைகளில் படங்களைப் பார்க்கும்போது உருவாகின்ற அந்த உணர்வு என்பது வேறெதிலும் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். இருந்தும், திரைத்துறையோடு சேர்ந்து OTT தளமும் முன்னேற்றம் கண்டால்தான் திரைத்துறையின் வளர்ச்சி மேலும் சிறப்பாக அமையும்.

தற்போதைய நிலையில், OTT தளங்களுக்கான எனது ஆதரவை நான் தெரிவிக்கின்றேன்" என சொல்கின்றார் ரகுல் பிரீத் சிங்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top