Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
கண்ணை சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகள்

sooriyan fm Gossip - கண்ணை சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

515 Views
கண்களுக்கு அடியில் தோன்றும் கருவளையங்கள் சோர்வையும்,மந்தமான உணர்வையும் மட்டும் தோற்றுவிப்பதில்லை. சருமத்தின் இயற்கையான அழகையும் அழித்துவிடும்.

1. நீர்ச்சத்து:தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.அதன் மூலம் கருவளைய பாதிப்பையும் தவிர்த்துவிடலாம்.தினமும் குறைந்தபட்சம் மூன்றரை லீட்டர் தண்ணீர் பருகுவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுத்துவிடும்.தண்ணீர் அதிகம் பருகுவது கண்களில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.கண் பகுதியில் சூழ்ந்திருக்கும் உப்பு செறிவின் அளவும் குறையும்.அதனால் கருவளையம் எட்டிப்பார்க்காது.

2.விற்றமின்கள் : கொலாஜன் அளவு குறைவது கருவளையங்கள் தோன்றுவதற்கான மற்றொரு காரணமாகும்.கண்களின் அடிப்புற இமை பகுதியில் வீக்கம் தோன்றுவதற்கும் வழிவகுத்துவிடும்.கொலாஜன் அமினோ அமிலங்களால் ஆனது என்பதால்,புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவும்.விற்றமின் ஏ,அதிக ஆன்டி ஒக்ஸிடன்ட்டுகளை கொண்டது.இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிறமிகளின் செயல்பாடுகளை குறைக்கும் திறன் கொண்டது.

அதன் காரணமாக கருவளையம் தோன்றுவது கட்டுப்படுத்தப்படும்.ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும்,சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும்,கருவளையங்களை குறைப்பதற்கும் விற்றமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.அதுபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தக்கூடியவை.

3. தூக்கம்: சரியான தூக்க சுழற்சி அழகை மேம்படுத்தும் சக்தி கொண்டது.தூங்கும்போது சருமம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள தொடங்கிவிடும்.புதிய செல்களை உருவாக்குவதுடன் ஒக்சியன் சுழற்சிக்கும் வழிவகை செய்யும்.போதுமான தூக்கம் இல்லாதபோது சருமம் தன்னை புதுப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.ஒக்சியன் சுழற்சியும் குறைந்துவிடும்.அதன் காரணமாக கண்களுக்கு அடிப்பகுதியில் இருக்கும் மென்மையான தன்மை கொண்ட சரும அடுக்கில் ரத்த ஓட்டத்தின் அளவு மாறுபடும்.அந்த பகுதியில் ஒக்சியனேற்றப்பட்ட ரத்தம் அதிகமாகத் தெரியும். அவை கருவளைய வட்டங்கள் தோன்றுவதற்கு காரணமாகிவிடும்.

4. சன்ஸ் கிரீன்: வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெளியே சென்றாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் சாதனங்கள்,கணினிகள்,டி.வி.களில் இருந்து நீல ஒளி கதிர்களும் சருமத்தை சேதப்படுத்துகின்றன.புற ஊதாக்கதிர்கள் வயதான அறிகுறிகளை தோற்றுவித்துவிடும்.சருமம் நெகிழ்வு தன்மையை இழந்து சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்ளும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top