Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
குழந்தைகளின் சருமத்திற்கு சிறந்த எண்ணெய் - தெரிந்து கொள்வோம்.

Sooriyan Gossip - குழந்தைகளின் சருமத்திற்கு சிறந்த எண்ணெய் - தெரிந்து கொள்வோம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

147 Views
குழந்தை பராமரிப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமல்ல, அதுவொரு கலை. வீடுகளில் அனுபவமிக்க மூத்தவர்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு குழந்தையைப் பராமரிப்பதென்பது மிகவும் சுலபமான ஒன்று. 

கிராமங்களில் வாழ்பவர்கள் கூட்டுக் குடும்ப முறையை பேணுகின்றபோது குழந்தைப் பராமரிப்பில் சிரமம் காண்பதில்லை. அத்துடன், வைத்தியரிடம் அடிக்கடி குழந்தையைத் தூக்கிச் செல்ல வேண்டிய தேவையும் உருவாவதில்லை. ஆனால், நகர்ப்புற இயந்திரத்தனமான வாழ்க்கையில் இந்த வரம் வாய்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.

இந்தநிலையில், ஒரு குழந்தையின் உடல் பராமரிப்பில் எண்ணெய் தேய்த்தல் மற்றும் குளிக்க வைத்தல் ஆகியவற்றை எப்படி முறையாகக் கையாள வேண்டும் என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா.....?

குழந்தை குளித்து முடித்த பிறகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும். வெயில் காலங்களில், இந்த எண்ணெய் மசாஜ், குழந்தைக்கு மிகவும் உகந்தது.

கருப்பு எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். எமது நாட்டிலும் இந்தியாவிலும் காலங்காலமாக நடைமுறையிலுள்ள வழக்கமாக, குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

வறட்சியான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி உடல் பிடித்து விடலாம். ஆனாலும், குழந்தையின் உதடு மற்றும் கண் பகுதிகளில் எண்ணெய் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கெண்ணெய் தடவி சராசரியாக 15 நிமிடங்கள் வரை மென்மையாக நீவிவிட்டு வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைக்க வேண்டும்.

குழந்தைக்கு மசாஜ் செய்ய மிகவும் ஏற்ற எண்ணெய்களில் ஒன்றாக பாதாம் எண்ணெய்யும் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. இந்த எண்ணெய்யில் விட்டமின் ஈ சத்து நிறைந்திருப்பது குழந்தையின் சருமத்திற்கு சிறப்பு என்று சொல்லப்படுவதோடு, குழந்தையின் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதனால், குழந்தை ஆழ்ந்த தூக்கம் கொள்வதற்கும் இது உதவுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top